ஹோம் /புதுக்கோட்டை /

100 ஆண்டுகளை கடந்த சுகாதாரத்துறை.... புதுக்கோட்டையில் தொடரும் கொண்டாட்டங்கள்.. 

100 ஆண்டுகளை கடந்த சுகாதாரத்துறை.... புதுக்கோட்டையில் தொடரும் கொண்டாட்டங்கள்.. 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News : புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மினி மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

சுகாதாரத்துறை 1922ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு சட்டத்துறை , நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் மினி மாரத்தான் போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதையும் படிங்க : அடேங்கப்பா.... புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலுக்கு இவ்வளவு பெருமைகளா!

இதில் 1000 பேர் கலந்துக்கொண்டனர் இந்த மினி மாரத்தான் ஓட்டமானது 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துவங்கி பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை, பிருந்தாவனம், பழனியப்பா கார்னர், திலகர் திடல், பால்பண்ணை கார்னர், PLA ரவுண்டானா kkc ரவுண்டானா வழியாக புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது.

இறுதியில் இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.

அதில் பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதுக்கோட்டை  செய்தியாளர் - சினேகா விஜயன்

First published:

Tags: Local News, Pudukkottai