முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம்..

புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம்..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம்

Pudukottai News | புதுக்கோட்டை நகராட்சிப் பூங்காவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 10 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே நகராட்சி சார்பில் ரூபாய் 9 கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா சிலை வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை சுற்றி நீரூற்று போன்று வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், நீரில் மீன்கள் வளர்க்கப்படவுள்ளது.

மேலும், அதன்மேல் சிறிய பாலம் போன்றும் அமைக்கப்பட்டு பேனா அருகே சென்று மக்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் பேனா ஒரு அடையாள சின்னமாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Pudukkottai