இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபிட்னஸ் ஃபிரீக்(fitness freack) என்ற பக்கத்தில் குறைந்த நாட்களில் உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? நீங்கள் அழகாக வேண்டுமா? என கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. மேலும் பெண் ஒருவர் ஆடியோ மூலம் சில பயிற்சிகளை அதில் தெரிவித்து இருக்கிறார். மேலும் உடற்பயிற்சி செய்யும் ஏராளமான பெண்களின் வீடியோக்கள் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தன.
ஒரு பெண்தான் இந்த பக்கத்தை நிர்வகிக்கிறார் என பலரும் நம்பி புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அந்த பக்கத்தை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். அப்போது இன்ஸ்டாகிராமில் பேசிய அந்த பெண், நாங்கள் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அழகிய கட்டுடலாக உங்கள் உடல் கட்டமைப்பு மாறும். உங்களின் ஆடையில்லாத புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பினால் அதற்கேற்ப உடல் பயிற்சிகளை பரிந்துரை செய்வோம் என தெரிவித்துள்ளார்.
பெண் உடல்பயிற்சி வல்லுநர் என நம்பிய சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். பதிலுக்கு சில உடற்பயிற்சி குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். இதனால் பலரும் நம்பி தங்களின் நிர்வாண படத்தை அனுப்பி உடற்பயிற்சி ஆலோசனைகளை பெற்றுள்ளனர். அதேவேளையில், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடியில், உங்களின் அந்தரங்க புகைப்படம் என்னிடம் உள்ளது. எனது எண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என சில பெண்களை ஒரு நபர் மிரட்டியுள்ளார்.
இதையும் படிக்க : மாமனாருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிய மருமகள்.. கணவன் அளித்த வித்தியாசமான புகார்..!
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சிலர் சேர்ந்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் பெண் ஜிம் பயிற்சியாளர் போல பேசி பெண்களின் நிர்வாண போட்டோக்களை பெற்று, மிரட்டியது ஒரு ஆண் என தெரியவந்தது. தொடர் விசாரணையில் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் 22 வயதான திவாகர் என்பவரை கைது செய்தனர்.
அவர்தான் பெண்போல பேசி பலரின் நிர்வாண படங்களை வாங்கி பணம் கேட்டு மிரட்டியதும், ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. திவாகரை போலீசார் கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். மோசடி செய்ய வேண்டும் என்பதற்காகவே டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெரும்பாலானவர்கள் பெண்கள் பெயரில் கணக்கை உருவாக்கி வைத்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்அப்பில் பெண்கள் வெளியிடும் புகைப்படத்தை தங்களுடைய புகைப்படம் போல பதிவேற்றம் செய்து பலரை ஏமாற்றி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றில் உண்மையான நபர் தான் நம்மிடம் பேசுவதாக நாம் நினைக்கக்கூடாது. சமூக வலைதளங்களில் அந்தரங்க புகைப்படம், வீடியோ போன்றவற்றை பதிவிடுவதையும், வீடியோ காலில் ஆபாசமாக தோன்றுவதையும் தவிர்க்குமாறு ஆண்கள் பெண்கள் என இரு தரப்பினரையும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cyber crime, Pondicherry, Puducherry, Tamil News