முகப்பு /செய்தி /புதுச்சேரி / உலக சிட்டுக்குருவிகள் தினம்.. ஆழ்கடலில் விழிப்புணர்வு பேனர்..

உலக சிட்டுக்குருவிகள் தினம்.. ஆழ்கடலில் விழிப்புணர்வு பேனர்..

சிட்டுக்குருவிகள் தினம்

சிட்டுக்குருவிகள் தினம்

World sparrow Day 2023 : உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி மெகா சைஸ் சிட்டுக்குருவி கூண்டை உருவாக்கி உள்ளார்.

  • Last Updated :
  • Puducherry, India

சிட்டு குருவிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி உலக சிட்டுக்குருவி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. சிட்டு குருவிகள் அழிந்து வருவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சிட்டு குருவிகளை பாதுகாப்பதற்கும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி விழிப்புணர்வு நிகழ்வாக ஆழ்கடலுக்கு அடியில் சிட்டுக்குருவி தின பேனர் வைக்கப்பட்டது. சமூக ஆர்வலர் அருண் பேனரை தயாரித்து ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் வைத்துள்ளார்.

புதுச்சேரி காந்தி சிலையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் 30 அடி ஆழத்தில் இந்த விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது. மேலும் அவர் உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி மெகா சைஸ் சிட்டுக்குருவி கூண்டை உருவாக்கி உள்ளார். இவர் ஏற்கனவே புதுச்சேரியில் சிட்டுக்குருவிகளுக்கான சிறிய அளவிலான ஆயிரம் கூண்டுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி இருக்கிறார்.

தற்பொழுது மெகா சைஸ் கூண்டினை உருவாக்கி உள்ளார். 16 கூண்டுகளைக் கொண்ட 8 அடி நீளம் உள்ள இந்த மெகா கூண்டை முதலமைச்சர் ரங்கசாமியிடம் கொடுத்து சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தினார்.

First published:

Tags: Puducherry, Tamil News, World Sparrow Day