முகப்பு /புதுச்சேரி /

ஹோமியோபதி மருத்துவம் எந்த நோய்களுக்கு சிறந்தது? புதுவை மருத்துவர் விளக்கம்..

ஹோமியோபதி மருத்துவம் எந்த நோய்களுக்கு சிறந்தது? புதுவை மருத்துவர் விளக்கம்..

X
ஹோமியோபதி

ஹோமியோபதி

World Homeopathy Day 2023 : ஹோமியோபதி மருத்துவத்தால் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம் என புதுவை சேர்ந்த அரசு மருத்துவர் அருணாச்சலம் கூறியதை காண்போம்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இன்று (ஏப்ரல் 10) உலக ஹோமியோபதி தினம், ஆங்கில மருத்துவ முறைக்கு அடுத்த இடத்தில் மக்களால் பயன்படுத்தப்படும் மருத்துவம் ஹோமியோபதி என்று கூறலாம். ஜெர்மன் மருத்துவர் மற்றும் வேதியியலாளர் சாமுவேல் ஹானிமானை ஹோமியோபதியின் தந்தை எனக் கூறுவர். அவருடைய பிறந்த தினத்தையே ஏப்ரல் 10ம் தேதி உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.

கடந்த காலத்தை காட்டிலும் தற்பொழுது ஹோமியோபதி மருத்துவம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் மக்களிடம் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தயக்கமில்லாமல், ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை முறையை எடுத்து கொள்வார்கள் என்று புதுச்சேரியை சேர்ந்த அரசு ஹோமியோபதி மருத்துவர் அருணாச்சலம் தெரிவித்தார்.

மேலும் இம்மருத்துவத்தை பற்றியும் இதன் சிறப்புகள் குறி்த்தும் நியூஸ் 18 உள்ளூர் செய்திக்கு அவர் கூறியதாவது, “ஹோமியோபதி மூலம் உடல் சோர்வு, மாதவிடாய் பிரச்சனை, ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலி, முடக்கு வாதம், மனச்சோர்வு, எரிச்சல் கொண்ட குடல் பிரச்சனை போன்ற பல நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி வைத்தியம் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.அதேபோல்ஹோமியோபதி மூலம்ஆஸ்துமா, பதட்டஉணர்வு, தோல் அழற்சி, கீல்வாதம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் குணப்படுத்தலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஹோமியோபதி மருத்துவத்தில் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம், ' நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்படுவதால் நோயாளிகளுக்கு எவ்விதமான பக்க விளைவும் ஏற்படாமல் முழுமையாக குணப்படுத்துபடுத்தலாம். இன்றைய நவீன காலத்தில் ஹோமியோபதி மருத்துவம் இன்னும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவது மட்டுமல்லாமல் இத்தகைய அற்புதமான மருத்துவத்தை நமக்கு வழங்கிய ஹனிமனை போற்றி இந்நாளில் நினைவு கூர்வோம்” என்று தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Health, Homeopathy, Lifestyle, Local News, Puducherry