முகப்பு /புதுச்சேரி /

வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டு மகளிர் தினத்தை கொண்டாடிய புதுச்சேரி மாணவிகள்!

வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டு மகளிர் தினத்தை கொண்டாடிய புதுச்சேரி மாணவிகள்!

X
மகளிர்

மகளிர் தினத்தை கொண்டாடிய புதுச்சேரி மாணவிகள்

Pondicherry News | மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் பெண்கள் உடல் நலம் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சர்வதேச மகளிர் தினவிழா மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் புதுச்சேரி கடற்கரையில் பெண்கள் உடல் நலம் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு மருத்துவத்துறை வல்லுனர்கள் பெண்களின் உடல் நலத்தை பேணும் வகையில் மருத்துவ குறிப்புகள், உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஐஜி. சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து 100க்கணக்கான பெண்கள் மற்றும் மாணவிகள் தங்களின் கைகளில் ஏந்திய வண்ண, வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு உலக மகளிர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

First published:

Tags: Local News, Puducherry