முகப்பு /புதுச்சேரி /

தனியார் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி.. புதுச்சேரியில் மகளிர் தினத்தில் ஸ்பெஷல் ஏற்பாடு!

தனியார் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி.. புதுச்சேரியில் மகளிர் தினத்தில் ஸ்பெஷல் ஏற்பாடு!

X
தனியார்

தனியார் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி

Puducherry News | புதுச்சேரியில் இருந்து கரையாம்புத்தூர் பகுதிக்கு செல்லும் தனியார் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பெண்களை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரையாம்புத்தூர் பகுதிக்கு முருகவிலாஸ் என்ற தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் இந்த பேருந்தில் பயணம் செய்யும் மகளிருக்கு டிக்கெட் இல்லாமல் இலவசமக பயணம் செய்ய பேருந்தின் உரிமையாளர் ஏற்பாடு செய்திருந்தார். அந்த வகையில் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். மேலும் 2வது ஆண்டாக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்வதற்கு அதன் உரிமையாளர் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Puducherry