முகப்பு /செய்தி /புதுச்சேரி / ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் பலி... காரைக்காலில் நிகழ்ந்த சோகம்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் பலி... காரைக்காலில் நிகழ்ந்த சோகம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Karaikal corona death | காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது

  • Last Updated :
  • Karaikal, India

காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்காலில் ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா தொற்று தற்போது இரட்டை இலக்கிற்கு அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டிருப்பதாக காரைக்கால் சுகாதார துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்து 35 வயதுமிக்க பெண் ஒருவருக்கு மூளை கட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் புதுச்சேரி ஜிப்மருக்கு கடந்த ஒன்றாம் தேதி கொண்டு வரப்பட்டார். எந்த நோயாளி அனுமதிக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுக்கும் நடைமுறைப்படி அவருக்கு பரிசோதனை எடுத்ததில் 2ம் தேதி நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் காரைக்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு கொரோனா விதிமுறைகளின் படி இன்றே அடக்கம் செய்யப்பட்டது.

top videos

    இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி சுகாதாரத்துறையிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளேன், அந்த அறிக்கையின் பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    First published:

    Tags: Corona death, Karaikal, Puducherry