முகப்பு /புதுச்சேரி /

சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி.. காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற தேர்வர்கள்..

சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி.. காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற தேர்வர்கள்..

X
வெற்றிபெற்றவர்களை

வெற்றிபெற்றவர்களை வாழ்த்திய கலெக்டர்

Karaikal News : புதுச்சேரியில் நடைபெற்ற சுருக்கெழுத்து தேர்வில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Karaikal, India

புதுச்சேரி அரசு சார்பில் 33 பணி இடங்களுக்கான சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் காரைக்காலை சேர்ந்த 20 நபர்கள் இத்தேர்வை எழுதினர். இவர்களில் 9 மாணவர்கள் ஆட்சியரின் உதவியாளராக உள்ள ஜெயசீலனிடம் இலவசமாக பயிற்சி பெற்றவர்கள்.

வெற்றிபெற்றவர்களை வாழ்த்திய கலெக்டர்

இவர்களில் 6 நபர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதுமட்டுமின்றி இந்த தேர்வில் காரைக்கால் மாணவர்கள் முதல் மற்றும் 3ம் இடத்தை பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் மரியாதை நிமித்தமாக ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தனது உதவியாளர் ஜெயசீலனையும் பாராட்டினார். மாணவர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாக பயிற்சி அளித்த ஜெயசீலன் மற்றும் நீதித்துறையை சேர்ந்த சிங்காரவேலு ஆகியோரை ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் ஆட்சியரின் செயலர் பாலு ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்கள் ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry