முகப்பு /புதுச்சேரி /

Akshaya Tritiya : அட்சய திரிதியைக்கு தங்கம் மட்டுமல்ல இந்த பொருட்களையும் வாங்கலாம்..

Akshaya Tritiya : அட்சய திரிதியைக்கு தங்கம் மட்டுமல்ல இந்த பொருட்களையும் வாங்கலாம்..

X
மாதிரி

மாதிரி படம்

Akshaya Tritiya 2023 : அட்சயதிரிதியைக்கு பல்வேறு  சிறப்புகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், புதுச்சேரி நகைகடை மேலாளர் அன்றைய தினத்தில் என்னென்ன பொருட்கள் வாங்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

'அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை, ‘அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம். அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் 23ம் தேதி ஞாயிற்றுகிழமை அட்சயதிரிதியை கொண்டாடப்படுகிறது.

அட்சய திரிதியை சிறப்புகள்:

பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான் என்று நம்பப்படுகிறது. பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம் என்று சொல்லப்படுகிறது.

திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.

வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம் என்றும் சொல்கின்றனர். இது பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம் என்றும், இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம" என்று கூறினாலே போதும் என்றும் சொல்லப்படுகிறது.

இதேபோல, பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர் இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை என்றும் சொல்கின்றனர்.

இதையும் படிங்க : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. புதுப்பொலிவுக்கு தயாராகும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்..

பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான் என்றும், கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான எனவும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியை நாளில்தான் போன்ற நம்பிக்கைகள் நிலவுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அட்சய திரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம்?

top videos

    அட்சய திரிதியை தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம் என்கிறார் புதுச்சேரி தனியார் நகைக்கடை மேலாளர்.

    First published:

    Tags: Akshaya Tritiya, Local News, Puducherry