முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் -  திருநங்கைகள் கோரிக்கை ...

புதுச்சேரியில் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் -  திருநங்கைகள் கோரிக்கை ...

X
திருநங்கைகளுக்கு

திருநங்கைகளுக்கு மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

Pondicherry News | புதுச்சேரியில் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் திருநங்கைகளுக்கான மருத்துவ முகாம் சி.எஸ்.ஐ ஆலயத்தில் நடைபெற்றது. 

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து திருநங்கைகளுக்கான மருத்துவ முகாமை சி.எஸ்.ஐ ஆலயத்தில் நடத்தியது. இந்த மருத்துவ முகாமில் ரத்ததானம், தோல் மற்றும் பல் நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை, கண் நோய்களுக்கான மருத்துவம், மற்றும் ரத்த அழுத்த அளவு, ரத்தத்தின் சர்க்கரை அளவு, மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் புதுச்சேரியில் உள்ள 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும் திருநங்கைகளின் அனைத்து நோய்களுக்குமான சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகளும்  வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த மருத்துவ முகாம் குறித்து பேசிய திருநங்கைகள், “புதுச்சேரியில் பல்வேறு மருத்துவ முகாம் நடத்தப்பட்டாலும் இந்த மருத்துவ முகாமில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்கள் நிலைமைகளை உணர்ந்து புதுச்சேரி அரசு மாதந்தோறும் இது போன்ற இலவச மருத்துவ முகாமை நடத்தினால் எங்களது உடல் நிலையை பராமரித்துக் கொள்ள வசதியாக இருக்கும். எனவே அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இந்த மருத்துவ முகாம் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் புதுச்சேரி அக்னி சிறகுகள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது

top videos
    First published:

    Tags: Local News, Puducherry