முகப்பு /புதுச்சேரி /

தண்ணீர் சிக்கனம் குறித்து பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுச்சேரி பெண்கள்

தண்ணீர் சிக்கனம் குறித்து பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுச்சேரி பெண்கள்

X
விழிப்புணர்வு ஏற்படுத்திய

விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுச்சேரி பெண்கள்

Puducherry News : ஆரோவில் கிராம செயல் வழி குழு சார்பில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

உலக ஈர நில நாளான பிப்ரவரி 2ம் தேதி முதல் உலக தண்ணீர் தினமான மார்ச் 22ம் தேதி வரை 7 வாரங்கள் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீர் சேமிப்பு மற்றும் நீர் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் திருவிழாவாக சுற்றுச்சூழல் ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி ஆரோவில் கிராம் செயல் வழி குழு சார்பில் இந்த திருவிழா ஆரோவில் அடுத்த இரும்பை கிராமத்தில் நடைபெற்றது.

இதில் ஆரோவில் கிராம செயல்வழிக் குழு இயக்குனர்கள் ஜெரால்டு மோரீஸ், அன்பு ஆகியோர் தலைமை வகிக்க , ஆரோவில் கிராம செயல்வழிக் குழு நிர்வாகிகள் ஆலன் பெர்னார்டு, அபா, பிரபீர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த தண்ணீர் திருவிழாவில் கலந்துகொண்டனர். இந்த திருவிழாவில் தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் மேலாண்மை, பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் சுய உதவிக்குழுவினர் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து பாடல்கள் மற்றும் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஆரோவில் கிராம செயல்வழிக் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான தண்ணீர் திருவிழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : துபாய்க்கு ஓட்டலில் நடனமாட சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... உடலை மீட்டு தர உறவினர்கள் கோரிக்கை

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட 3-மாவட்டங்களில் 7 இடங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு தண்ணீர் திருவிழா அடுத்ததாக ஆரோவில் பகுதியில் உள்ள 10 பள்ளிகளில் நடத்தும் ஆரோவில் கிராம் செயல் வழிகுழு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Puducherry