முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த தன்னார்வலர்கள்!

புதுச்சேரியில் மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த தன்னார்வலர்கள்!

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த தன்னார்வலர்கள்

Puducherry News | வேருடன் பிடுங்கி ரோட்டில் வீசப்பட்ட மஞ்சள் கொன்றை மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்து அதை மீண்டும் பாண்டி மெரினாவில்  நட்ட தன்னார்வலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி பாரதி வீதி, செயின் தெரோஸ் வீதி சந்திப்பில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மஞ்சள் கொன்றை மரம் வேருடன் பிடுங்கி ரோட்டில் வீசப்பட்டது. இதை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர் ரஞ்சித் கவனித்து தன்னார்வலர்கள் குழு ஒன்றுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி விரைந்து வந்த தன்னார்வலர் ஆனந்த் மரத்தை மீண்டும் நடவு செய்யும் பணியில் இறங்கினார். மேலும் தன்னார்வலர்கள் பலர் முயற்சியால் மஞ்சள் கொன்றை மரம் புதுவை மெரினாவில் மீண்டும் நடவு செய்யப்பட்டது. தன்னார்வலர்களின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

First published:

Tags: Local News, Puducherry