முகப்பு /புதுச்சேரி /

ராம-லஷ்மணனை தோளில் சுமந்து நிற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர் - புதுச்சேரி அருகே பிரதிஷ்டை!

ராம-லஷ்மணனை தோளில் சுமந்து நிற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர் - புதுச்சேரி அருகே பிரதிஷ்டை!

X
ராம-லஷ்மணனை

ராம-லஷ்மணனை தோளில் சுமந்து நிற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர்

Puducherry News : புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான புத்துப்பட்டு அருகே அமைந்துள்ள சித்ரகூடத்தில் ஸ்ரீசீதா இராம பக்த ஆஞ்சநேய ஸ்வாமி நூதன பிரதிஷ்டை வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மஞ்சக்குப்பம் புத்துப்பட்டு கிராமம் அருகே அமைந்துள்ள சித்திரக்கூடத்தில் ஆஞ்சநேயருக்கு புதிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் 19 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன ஸ்ரீ சீதா இராம லஷ்மன சமேத விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்யும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராமபுரம் ஸ்ரீமத் வாயுஷித்த ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், தனது திருக்கரங்களால் ப்ரதிஷ்டை செய்துவைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்தப் பிரதிஷ்டை விழாவில் வைணவர்கள், சிவனடியார்கள், அனுமன் தாஸர்கள், ஆன்மீகஅன்பர்கள், ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீராமர் லஷ்மணனை தன் தோளில் சுமந்து நிற்கும் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry