முகப்பு /புதுச்சேரி /

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் பெருவிழா

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் பெருவிழா

X
விஜய்

விஜய்

Vijay Makkal Iyyakkam : விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியை அடுத்த கோட்டகுப்பம் பகுதியில் ரமலானை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறக்கும் பெருவிழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த கோட்டகுப்பம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு இயக்கத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், 100 நபர்களுக்கு மளிகை பொருட்கள் 5 கிலோ அரிசி, புடவை மற்றும் 300நபர்களுக்குபரோட்டா,சிக்கன்கிரேவி, இடியாப்பம், இட்லி ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் நகராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, துணை தலைவர் முபாரக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் பெருவிழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டக்குப்பம் நகர மன்ற உறுப்பினர் 21வது வார்டு முகமது கவுஸ் செய்திருந்தார்.  இந்நிகழ்ச்சியில், உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் & விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, விழுப்புரம் மாவட்ட தலைவர்குஷி மோகன்மற்றும் விழுப்புரம் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

First published:

Tags: Local News, Puducherry, Ramzan