முகப்பு /புதுச்சேரி /

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரத்தம் தட்டுப்பாடு.. களமிறங்கிய விஜய் ரசிகர்கள்..

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரத்தம் தட்டுப்பாடு.. களமிறங்கிய விஜய் ரசிகர்கள்..

X
ரத்ததானம்

ரத்ததானம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

Vijay Fans Donated Blood : புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு மருத்துவமனை ரத்தம் வங்கியில் ரத்த தட்டுப்பாடு என அறிந்த விஜய் ரசிகர்கள் 100க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு ரத்தம் வழங்கினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் போதிய அளவில் ரத்தம் இருப்பு இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று ரத்தம் வழங்குவதாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் ரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்து ரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். அதற்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் காலை முதல் 100க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

ரத்த தானம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

இதையும் படிங்க : என்னது நம்ம ஈரோட்டில் உள்ள விவசாய நிலத்துல கங்கை தீர்த்தமா? குளித்தால் பாவம் விலகும் என ஐதீகம்!

இதனையடுத்து போட்டி போட்டுக் கொண்டு ரத்த வங்கியில் ரத்தம் கொடுத்தனர். மேலும், ரத்தம் வழங்கிய 100க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்களுக்கு விஜய் மன்றம் சார்பாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry