முகப்பு /புதுச்சேரி /

நடிகர் சூரியின் ‘விடுதலை’ பேனருக்கு கற்பூரம் காட்டி அதகளப்படுத்திய புதுச்சேரி ரசிகர்கள்!

நடிகர் சூரியின் ‘விடுதலை’ பேனருக்கு கற்பூரம் காட்டி அதகளப்படுத்திய புதுச்சேரி ரசிகர்கள்!

X
விடுதலை

விடுதலை

viduthalai Movie : நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், சூரியின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து கற்பூரம் காட்டி புதுச்சேரி ரசிகர்கள் அதகளப்படுத்தினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படம் புதுச்சேரியில் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டி, புதுவை மாநில நடிகர் சூரி தலைமை நற்பணி இயக்கத்தினர் சூரியின் பேனருக்கு மாலை அணிவித்தும், தேங்காய் உடைத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் திரைப்பட உலகில் காமெடி நடிகராக அறிமுகமான சூரி, தற்போது நாயகனாக மாறியுள்ளார். அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகராக சூரி நடித்துள்ள விடுதலை திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் ஜீவா, ருக்மணி உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில், நடிகர் சூர்யா நடித்துள்ள விடுதலை திரைப்படம் வெளியாகியது. தொடர்ந்து முதல் காட்சிக்கு முன்பாக ‘புதுவை மாநில நடிகர் சூரி தலைமை நற்பணி இயக்கம்’ சார்பாக படம் வெற்றி பெறக் கோரி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    புதுச்சேரி மாநில தலைவர் தன்ராஜ், செயலாளர் சந்தோஷ் மற்றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நடிகர் சூரியின், விடுதலை திரைப்பட பேனருக்கு மாலை அணிவித்தும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகைச்சுவை நடிகராக திரைப்பட உலகில் நுழைந்து தற்போது இந்த விடுதலை படம் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்னார் நடிகர் சூரி. சூரியின் கதாநாயகன் அவதாரத்தில் முதல் படமாக வெளியாகி உள்ள விடுதலையை பார்க்க ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தியேட்டரில் குவிந்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry