முகப்பு /புதுச்சேரி /

ஊழியர்கள் அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபரீதம்.. புதுச்சேரியில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்..

ஊழியர்கள் அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபரீதம்.. புதுச்சேரியில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்..

X
புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry News | புதுச்சேரி நகரப் பகுதியில் சாலையோரத்தில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான மரத்தை நகராட்சி ஊழியர்கள் வெட்ட முற்பட்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் வைசியால் வீதியில் சாலை ஓரத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று இருந்தது. சாலை மற்றும் வாய்க்கால் விரிவுபடுத்தும் பணிக்காக அந்த மரத்தை வேரோடு வெட்டி எடுக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் மரத்தை வெட்டும்போது அந்த மரம் திடீரென சாலையில் விழுந்தது. இதில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிராக்டர் மற்றும்இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. பின்னர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு வனத்துறை, தீயணைப்புதுறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரியில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

First published:

Tags: Local News, Puducherry