முகப்பு /புதுச்சேரி /

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்!

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்!

X
ரூபாய்

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்

Vambupattu Muthumariamman Temple : வம்புப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 10 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊஞ்சலில் அமர்ந்திருந்த அம்மன் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் செய்து அருள் அளித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் செடல் உற்சவம் கடந்த மாதம் 29ம் தேதி ஐயப்பனாரப்பன் கோயிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது. இதையொட்டி முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, அதனைத் தொடர்ந்து சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிவன்–பார்வதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பத்து ரூபாய் நோட்டில் மாலை அணிவித்து ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் அம்மன் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி அருள் பாலித்தார். அந்நிகழ்வின் தொடர்ந்து வான வேடிக்கையுடன் சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

இதில், வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாளை காலை 8:00 மணிக்கு பால் குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது.அதனைத் தொடர்ந்து செடல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry, Religion18