முகப்பு /புதுச்சேரி /

வாத்தி படத்தை வரவேற்று புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்..

வாத்தி படத்தை வரவேற்று புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்..

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

Vaathi Movie Review | வாத்தி பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதை நினைவூட்டும் வகையில் பள்ளி சென்ற மாணவ, மாணவிகளுக்கு படிப்பு தான் முக்கியம் என்ற நோக்கத்தில் நோட்டு புத்தகங்கள் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் இன்று வெளியானது. இந்நிலையில் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் காலை 8 மணி முதல் காட்சி திரையிடப்பட்டது.

முதல் காட்சியில் திரண்ட ரசிகர்கள் மேளதாளத்துடன் தனுஷ் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து ஆரவாரத்துடன் கொண்டாடினர். அப்போது திடீரென ரசிகர்கள் வாத்தி பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதை நினைவூட்டும் வகையில் பள்ளி சென்ற மாணவ, மாணவிகளுக்கு படிப்பு தான் முக்கியம் என்ற நோக்கத்தில் நோட்டு புத்தகங்கள் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினர். பெரும்பாலும் ரசிகர்கள் புதிய படம் திரைக்கு வந்தால் கட்டவுட் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம்.

மேலும் புதுவையில் ஒரு படி மேல் பீர் அபிஷேகமும் செய்வார்கள். ஆனால் புதியதாக இப்படத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி படிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு கூறியது. புதுச்சேரி மக்களிடையே வரவேற்பையும், ஆச்சரியத்தையும் பெற்றுள்ளது.

First published:

Tags: Local News, Puducherry