முகப்பு /புதுச்சேரி /

அதிர்ச்சி வீடியோ.. புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்..

அதிர்ச்சி வீடியோ.. புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்..

X
புதுச்சேரி

புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்

Abhishegapakkam Primary Health Center : புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்தில் தூய்மை  பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது, இந்த மையத்தின் மூலம் அபிஷேகப்பாக்கம், டிஎன்.பாளையம், தேடுவார் நத்தம் மற்றும் அருகே உள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர்.

இந்நிலையில், நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் தடுப்பு ஊசி தட்டுப்பாடு, மேலும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இல்லாத நிலை ஆகியவற்றால் குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் பல இன்னல்களை சந்திப்பதாகவும், அதேபோல் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்க்கு பணிக்கு வராமல் நோயாளிகளை காக்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

தற்போது இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் விபத்தில் காயமடைந்து ,சிகிச்சைக்கு வரும் நபர் ஒருவருக்கு, அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர், காயமடைந்த இடத்திற்கு மருந்து கட்டுபோடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரலாக பரவும் இந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Puducherry