முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிநீர் கால்வாயை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..

புதுச்சேரியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிநீர் கால்வாயை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..

X
புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry News : புதுவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிநீர் கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி பிரான்ஸ் ஆட்சி காலத்தில் இருந்து வீதி அழகாக நேருக்கு நேராக அமைக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமான கட்டிடங்களும் அழகாக காட்சியளிக்கிறது. அதேபோல் கழிவுநீர் கால்வாய்கள் கொண்டு தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு அமைப்புகளுடன் சாலைகள் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

இதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு நவீன திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. என்னதான் நவீன மயமாக்கப்பட்டாலும் தெருவோரம் உள்ள மனித கழிவுகளுடன் வரும் சாக்கடையில் எந்த ஒரு நவீன இயந்திரங்களும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகும் மனித கழிவுகளை மனிதனே அல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி ரயில்வே நிலையம் உள்ள சுப்பையா சாலையில் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கையுறைகள் மற்றும் லெதர் ஷூக்கள் இன்றியும் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்தனர். ஒரு சிலர் குப்பையில் கிடந்த பிளாஸ்டிக் கவரை பாதுகாப்பு உறையாக பயன்படுத்தி குப்பைகளை அள்ளினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வேறு தொழில் தெரியாத காரணத்தினாலும் வறுமையின் காரணமாகவும் கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி வருவதாக பணியாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர்வாய்கால்களை சுத்தம் செய்வதால் கை கால்கள் எரிகிறது என்றும் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த அடைப்புகளை சுத்தம் செய்து மண் அள்ளுவதாக கூறுகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் வேறு தொழில் இல்லாத காரணத்தினால் மீண்டும் சாக்கடை அல்லும் வேலைக்கு வருகிறோம்” என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Puducherry