முகப்பு /புதுச்சேரி /

கரை ஒதுங்கிய அரிய வகை ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்ட போலீசார்..

கரை ஒதுங்கிய அரிய வகை ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்ட போலீசார்..

X
மாதிரி

மாதிரி படம்

Puducherry News | புதுவை புதுக்குப்பம் பகுதியில் அரிய வகை கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. அதை கடற்கரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். காவலர்களின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட மூர்த்தி புதுகுப்பம் மீனவ கிராமம் சமீப காலமாக புதுவையில் தவிர்க்க முடியாத சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இதேபோன்று கிருமாம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் கடலோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 40 கிலோ எடை உள்ள ஆமை ஒன்று கடலிலிருந்து கரை ஒதுங்கியது.

கரை ஒதுங்கிய ஆமை

கரை ஒதுங்கிய ஆமையை காவலர்கள் மணிவண்ணன் மற்றும் கலைமணி மீட்டு அந்த ஆமையை தூக்கிச் சென்று கடலில் மீண்டும் விட்டனர் இதைப் பார்த்த கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவலர்களின் மனிதாபிமான செயலுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Pondicherry, Puducherry