முகப்பு /புதுச்சேரி /

‘கண்ணை நம்பாதே’ படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்று பரிசளித்த புதுச்சேரி ரசிகர்கள்! 

‘கண்ணை நம்பாதே’ படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்று பரிசளித்த புதுச்சேரி ரசிகர்கள்! 

X
‘கண்ணை

‘கண்ணை நம்பாதே’ படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்று பரிசளித்த புதுச்சேரி ரசிகர்கள்

Puducherry News : உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே திரைப்படம் வெற்றி பெற, உதயநிதி பேனருக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றிய ரசிகர்கள் படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள பாலாஜி திரையரங்கில் வெளியாகியுள்ள, இத்திரைப்படத்தை புதுச்சேரி மாநில உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் உத்தமன் ஏற்பாட்டில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வெற்றி பெற பேனர் கட்டி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில் வைக்கப்பட்ட பேனர்

மேலும், உதயநிதி ஸ்டாலின் பேனருக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி வரவேற்ற அவரது ரசிகர்கள் படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினர். தொடர்ந்து புதுச்சேரி மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் படத்தை பார்த்து ரசித்து பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோபால், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு படத்தை பார்த்து ரசித்தனர்.

First published:

Tags: Local News, Puducherry, Tamil Cinema