முகப்பு /புதுச்சேரி /

போலீசார் மீது பாலியல் புகார் - புதுச்சேரியில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்!

போலீசார் மீது பாலியல் புகார் - புதுச்சேரியில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்!

X
திருநங்கைகள்

திருநங்கைகள் முற்றுகை

Pondicherry News|புதுச்சேரியில் திருநங்கைக்கு போலீசார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி காவல்துறை டிஜிபி அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காவல்துறை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் டிஜிபி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியில் திருநங்கை வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள பாலம் அருகே இரவு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த 3 போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் கூறினர்.

திருநங்கைகள் முற்றுகை

மேலும் பாதிக்கப்பட்ட திருநங்கைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் திருநங்கைகள் தெரிவித்தனர்.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாகாசைதன்யா, திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சம்பவம் நடைபெற்ற அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்திய அவர் போலீசார், தவறு செய்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Puducherry