முகப்பு /புதுச்சேரி /

'பத்து தல' படம் வெற்றி பெற பிரியாணி விருந்து வைத்த சிம்பு ரசிகர்கள்..

'பத்து தல' படம் வெற்றி பெற பிரியாணி விருந்து வைத்த சிம்பு ரசிகர்கள்..

X
நடிகர்

நடிகர் சிலம்பரசன் நடித்த  'பத்து தல'

Pathu Thala Movie Celebration | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாக உள்ள ‘பத்து தல’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி புதுச்சேரி சிலம்பரசன் ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் கறி விருந்து அளித்தனர். 

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நடிகர் சிலம்பரசன் நடித்த  'பத்து தல' திரைப்படம் நாளை (மார்ச் 30-ம் தேதி) வெளியாகவுள்ள நிலையில் திரைப்படம் வெற்றி பெற புதுச்சேரி சிம்பு ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக பத்து தல படம் வெற்றி பெற வாழ்த்தி புதுவை சிம்பு தலைமை மன்றத்தின் ஆதரவோடு காலாபட்டில் உள்ள தம் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக சினேகா முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி, முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டது.

'பத்து தல'

இந்த நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் வேல்ராஜ், ரமேஷ், தண்டபாணி, கோவிந்து,என நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் படம் வெளியாகியுள்ள தியேட்டர்கள் முன்பு பட்டாசுகள் இனிப்புகள் வழங்கி மிகப்பெரிய பேனர் கட்டி படம் வெளியீட்டை பெரிய திருவிழா போல கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Actor Simbhu, Local News, Pondicherry, Puducherry