புதுச்சேரி பிள்ளைச்சாவடி நா.வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் 100 சதவீதம் புகையிலையில்லா பள்ளி மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது பள்ளி தலைமையாசிரியர் திலகவதி தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆசிரியை கசி இந்த நிகழ்ச்சியை முன்னின்று ஏற்பாடு செய்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, அறிவியல் ஆசிரியர் பிரேமானந்த் கோன் தரண் வரவேற்புரை வழங்கினார். புதுச்சேரி சுகாதார துறையை சார்ந்த ஐயனார் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் புகையிலையில்லா சுற்றச்சூழலை உருவாக்குவோம் என்பதை பற்றி கருத்துக்களை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் ‘புகையிலையில்லா பள்ளி, புகையிலையை ஒழிப்போம்’ என்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரம் விநியோகித்தும், புகையிலை ஒரு உயிர்கொல்லி என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர். மேலும் சில மாணவர்கள், புகையில்லா பள்ளியை உருவாக்க மாறுவேடம் அணித்து விழியுணர்வை ஏற்படுத்தினர். இதனையடுத்து, மாணவ, மாணவிகள் குழுவாய் இணைந்து பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், பங்குபெற்ற மாணவர்களுக்கும், மாறுவேடம் அணிந்து வந்த மாணவர்களுக்கும், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்கள், பொம்மலாட்டம் நிகழ்த்திய மாணவர்களுக்கு, சிறப்பு விருத்தினர்களாக வந்து கலந்துகொண்ட தன்னம்பிக்கை துளிர் அமைப்பை சேர்ந்த எலிசபெத் ராணி மற்றும் பொம்மலாட்ட கலைஞர் சுபாஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இறுதியாக பள்ளியின் ஆங்கில ஆசிரியை நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள் செல்வநாயகி, ஜெகதீசன், கோபாலகிருஷ்ணன், பெலிக்ஸ், விஜயபாஸ்கர், நான்சி, ரத்தினகுமாரி, உமாதேவி மற்றும் அலுவல ஊழியர்கள் ஒத்துழைப்புடன் விழா இனிதே நிறைவடைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry