முகப்பு /புதுச்சேரி /

கதிர்காமம் அரசு பள்ளி மாணவிக்கு ராஜமரியாதை.. புதுவை ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு..

கதிர்காமம் அரசு பள்ளி மாணவிக்கு ராஜமரியாதை.. புதுவை ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு..

X
கதிர்காமம்

கதிர்காமம் அரசு பள்ளி மாணவிக்கு ராஜமரியாதை

Puducherry News : புதுச்சேரி கதிர்காமம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியருடன் பயணித்து அவரது அன்றாட நிகழ்வுகளை கண்காணித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மாணவர்கள் படிக்கும்போதே பல எதிர்கால கனவுகளுடன் தங்களை தயார்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர். அவ்வாறு ஆர்வம் உள்ள மாணவர்கள் மத்தியில் இந்திய குடிமைப் பணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாவட்ட ஆட்சியரின் பணிகள் குறித்து அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அரசு பள்ளிகளை சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்தார்.

அதன்படி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஐஸ்வர்யாவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த ஆட்சியர் மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்றாடம் நடைபெறும் அனைத்து அலுவலக பணிகள் குறித்து நேரடியாக காண வாய்ப்பளித்தார். மாவட்ட ஆட்சியர் அறையில் அமர்ந்து பொதுமக்கள் எந்த மாதிரியான புகார்களை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கின்றனர்? அடுத்த கட்டமாக பொதுமக்கள் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது எப்படி? என்பதை மாணவி ஐஸ்வர்யா அறிந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருடன் காரில் பயணித்து அவர் ஆட்சியர் ஆய்வு செய்யும் அரசு அலுவலகங்கள் மற்றும் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும் பங்கேற்று அரசு நிர்வாக பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கவனித்தார். அதன்படி கடற்கரை சாலையில் உள்ள பொலிவுறு நகரத் திட்ட அலுவலகத்தில் பொலிவுறு நகரத் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை குறிப்பெடுத்துக் கொண்ட மாணவி ஐஸ்வர்யா, பிறகு அங்கிருந்து புறப்பட்டு சட்டமன்றம் சென்றார்.

இதையும் படிங்க : அமைச்சர் சந்திர பிரியங்காவுடன் செல்பி எடுக்க அலைமோதிய புதுவை பெண்கள்.!

இதையடுத்து, அங்கு சபாநாயகர் செல்வத்துடன் சட்டப்பேரவை நடைபெறும் மண்டபத்தை பார்வையிட்டார். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்ட மாணவர்களுக்கு அரசு நிர்வாகம் உள்ளிட்ட குடிமைப் பணிகள் குறித்து நேரடியாக அறிந்து கொள்வதன் மூலம் அப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வரும். அதன் மூலம் அவர்கள் கல்வியை கூடுதல் திறனுடன் கற்க ஆர்வம் ஏற்படும் என்பதற்காக இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், “புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் எப்படியாவது தங்கள் குறைகள் நிவர்த்தி ஆகும் என நம்புகின்றனர். ஆகவே இவ்வளவு உயர்ந்த குடிமைப்பணிக்கு வரவேண்டும் என்ற ஆசையும், உத்வேகமும் எனக்குள் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்த பயணத்தில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் மாணவி ஐஸ்வர்யாவுக்கு காரில் ஏற கார் கதவை மாவட்ட ஆட்சியர் திறந்து விட்டார். மேலும் அவரின் அருகிலேயே அதாவது அவருக்கு சமமாகவே மாணவியை எப்போதும் டிரீட் செய்தார். இதனை ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து மெய்சிலிர்த்து போயினர்.

First published:

Tags: Local News, Puducherry