புதுச்சேரியில் உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர். திருக்குறள் மாநாட்டையொட்டி, விழா நடைபெற்ற அரங்கின் வெளியில் திருக்குறளை பற்றி எதிர்கால சந்ததியினருக்கு விளக்கும் வகையில் பல்வேறு பொருட்களில் திருக்குறளை எழுதி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இதில் திருவண்ணாமலை ஆரணியை சேர்ந்த தமிழ் ஆசிரியர் உமாராணி என்பவர் திருக்குறள் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், திருக்குறளை அழியாமல், எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஒருவருடமாக 1330 குறளையும் வெவ்வேறு பொருட்களில் எழுதி சாதனை படைத்து வருகிறார். குறிப்பாக அவர் சிறிய விதைகளில் ஒவ்வொரு விதையிலும் ஒவ்வொரு குறளாக 1330 குறள்களையும் எழுதி அசத்தியுள்ளார்.
அதேபோல் குடையின் மேலும், காய்களிலும், வளையல்கள், ரப்பர்கள், சிறிய மணிகளிலும் 1330 திருக்குறளையும் எழுதி அசத்தியது மட்டுமல்லாமல் திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கு தான் பல்வேறு பொருட்களில் எழுதிய திருக்குறளை காட்சிப்படுத்தி வருகிறார். இவர் இதுவரை சாதனை பெண்மணி ஆல் இன்டியா புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து உமாராணி கூறும்போது, ”திருக்குறள் என்பது அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. திருக்குறளை அழியாமல் பாதுகாக்கும் வகையில் என்னால் முடிந்த சிறிய முயற்சியில் கடந்த ஓராண்டாக செய்து வருகிறேன். குடைகளிலும், விதைகள், காயின்கள், மணிகள், ரப்பர், வளையல்கள், விதைகள் போன்றவற்றில் 1330 திருக்குறளையும் எழுதி வருகிறேன். தொடர்ந்து திருக்குறளை பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு திருக்குறளை கொண்டு செல்லவும் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன்” என்று உறுதியுடன் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry