முகப்பு /புதுச்சேரி /

ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை...

ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை...

X
ஈஸ்டர்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Pondicherry News | புதுச்சேரியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புனித ஜென்மராக்கினி உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு பிராத்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புனிதவெள்ளியை தொடர்ந்து கல்லறையில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறித்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி நகரப்பகுதியில் சாந்தோம் தேவாலயத்தில் உள்ள 325 ஆண்டு பழமையான தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் காலிஸ்த் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைதொடர்ந்து பேராலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட குகையில் இருந்து இயேசு உயிர்த்து எழுந்தார். அப்போது கிறிஸ்தவர்கள் மலர்களை தூவி இயேசு பிறப்பு பாடல்களை பாடினர். இதேபோல் இருதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry