புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனிஸ்வர பகவான் கோவிலில் பிரக்ருதி எனும் பிரணாம்பாள் ஏன்ற பெண் யானை உள்ளது.
பிரக்ருதி யானையை தினமும் இரு வேளை கோவிலின் சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் குளிக்கப் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரத்தின் கோடை வெப்பம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் காரைக்காலில் அதிகமாக கஇருந்து வருகிறது. வெயிலில் தாக்கத்தைக் தணிப்பதற்காக தீர்த்தக் குளத்தில் கூடுதல் நேரத்தில் பிரக்ருதி யானையை குளத்தில் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரக்ருதி யானை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சிறு பிள்ளையை போல்குளத்தை விட்டு வெளியேறாமல் குத்தாட்டம் போட்டது.
இதேபோல் கோவில் நிர்வாகம், யானை மண்டபத்தில் யானை நீராட வசதியாக ஷவர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. வெயில் காலமாக இருப்பதால், வெயிலின் தாக்கத்திலிருந்து மீள இந்த வசதியை மகிழ்ச்சியாக பயன்படுத்திக் கொள்வதாக யானை பாகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், காலை ஷவரிலும் மாலை குளத்திலும் என இரு இடங்களிலும் மாறி குளிப்பதால் பிரக்ருதி யானைக்கு அக்னி நட்சத்திரத்தின் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீண்டு குளிர்ச்சியை காண முயல்கிறது என ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry