முகப்பு /புதுச்சேரி /

புதுவை சடையாண்டி ஐயனாரப்பன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்..

புதுவை சடையாண்டி ஐயனாரப்பன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்..

X
புதுவை

புதுவை சடையாண்டி ஐயனாரப்பன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

Puducherry News | புதுச்சேரி அடுத்த பள்ளித்தென்னல் மதுரா சடையாண்டி குப்பம் கிராமத்தில் உள்ள பூர்ண புஷ்களாம்பாள் சமேதா ஸ்ரீசடையாண்டி ஐயனாரப்பன் ஆலய மண்டல அபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. 

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த பள்ளித்தென்னல் மதுரா சடையாண்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபூர்ண புஷ்களாம்பாள் சமேதா ஸ்ரீசடையாண்டி ஐயனாரப்பன் ஆலய மண்டல அபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கு பூஜை, சங்காபிஷேகம், ஸ்ரீஐயனாரப்பன் அபிஷேக ஆராதனை, சடையாண்டி குப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து தட்டு வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன.

மேலும், திருக்கல்யாண உற்சவத்தில், சடையாண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் விருந்தோம்பல் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீபூர்ண புஷ்களாம்பாள் சமேதா ஸ்ரீசடையாண்டி ஐயனாரப்பன், ஸ்ரீருத்ர வன்னிய மகாராஜா, ஸ்ரீசடையாண்டி சித்தர் சுவாமிகள் ஆகியோருக்கு மின் அலங்காரம் மற்றும் பூக்களால் அலங்கரித்து வீதி உலா காட்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனைத்தொடர்ந்து பாரதமாதா நாடக சபாவின் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மண்டல அபிஷேகம் பூர்த்தி விழாவில் கிராமவாசிகளும் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் செய்திருந்தார்.

    First published:

    Tags: Local News, Puducherry