முகப்பு /புதுச்சேரி /

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா - 1008 பால்குட ஊர்வலம்!

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா - 1008 பால்குட ஊர்வலம்!

X
தீவனூர்

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

Theevanur viniyagar kovil : புதுச்சேரி தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா உற்சவத்தில் கிராம மக்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தீவனூரில் அமைந்துள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் கடந்த 25ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. 7ம் நாள் நிகழ்ச்சியில், காலை உற்சவர் பிறை சந்திரனில் அமர்ந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து உற்சவர் முன் செல்ல கிராம மக்கள் 1008 பால் குடங்களை தலையில் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இவ்வாறு, ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட பால்குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீர் மற்றும் பால்குடங்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry