முகப்பு /புதுச்சேரி /

கதிர்காமம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா.. நூற்றுக்கணக்கானோர் நேர்த்தி கடன்!

கதிர்காமம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா.. நூற்றுக்கணக்கானோர் நேர்த்தி கடன்!

X
கதிர்காமம்

கதிர்காமம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Kathirgamam Draupathi Amman Temple | புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற கதிர்காமம் திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கதிர்காமத்தில் பிரசித்திபெற்ற திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலாவும் நடைபெற்றது.

மேலும், ஊரணி பொங்கல், சாகை வார்த்தல், பால் கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதன்பிறகு பத்துநாள் பாரதம் படிக்கப்பட்டு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது அம்மன் பச்சை பட்டு உடுத்தி தீமிதிக்கும் இடத்திற்கு வந்தவுடன் பக்தர்கள் தீ மிதித்தனர்.

கதிர்காமம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கதிர்காமம் உள்ளிட்ட சுற்றுப்புற சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry