முகப்பு /புதுச்சேரி /

ஸ்ரீசுயம்பு பூதக்காளி அம்பாள் கோவிலில்  தீச்சட்டி திருவிழா.. புதுச்சேரியில் பக்தர்கள் பரவசம்! 

ஸ்ரீசுயம்பு பூதக்காளி அம்பாள் கோவிலில்  தீச்சட்டி திருவிழா.. புதுச்சேரியில் பக்தர்கள் பரவசம்! 

X
ஸ்ரீசுயம்பு

ஸ்ரீசுயம்பு பூதக்காளி அம்பாள் கோவிலில்  தீச்சட்டி திருவிழா

Theechatti Thiruvizha | புதுச்சேரியை அடுத்த ஞானக்கல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு பூத காளியம்மன் திருக்கோவிலில் தீச்சட்டி திருவிழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஞானக்கல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு பூத காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தீச்சட்டி திருவிழா நடைபெற்றது. முன்னதாக, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் குருக்களால் யாகசாலை மற்றும் மகாமேரு பிரதிஷ்டை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 20ம் பட்டம் குருமகா சந்திதானங்கள் மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பிரதிஷ்டை செய்தார்.

இதனைத்தொடர்ந்து, ஆறுமுகப்பெருமானுக்கு வேல் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மூட்டி, கற்பூரம் ஏத்தி, தீச்சட்டியை கையில் ஏந்தி கோயிலை வலம் வந்தனர். இந்த விழாவில் 10க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முன்னாள் வானூர் ஒன்றிய பெருந்தலைவர் வி.எம்.ஆர்.சிவா தலைமையில் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வகணபதி, வேல்முருகன், நாராயணபுரம் ஆறுமுகம், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புருஷோத்தமன், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், ஆலயத்தில் நடைபெற்ற பூஜைகளை முன்னூர் சரவணன் குருக்கள் சிறப்பாக செய்திருந்தார்.

First published:

Tags: Local News, Puducherry