முகப்பு /புதுச்சேரி /

ஞானக்கல்மேடு சுயம்பு பூதக்காளி அம்பாள் கோயிலில் தீச்சட்டி திருவிழா!

ஞானக்கல்மேடு சுயம்பு பூதக்காளி அம்பாள் கோயிலில் தீச்சட்டி திருவிழா!

X
ஞானக்கல்மேடு

ஞானக்கல்மேடு சுயம்பு பூதக்காளி அம்பாள் கோயிலில் தீச்சட்டி திருவிழா

Suyambu Poothakali Ambal Temple | ஞானகல்மேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு பூதக்காளி அம்பாள் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு தீச்சட்டி எடுத்தல் விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மரக்காணம் அருகேயுள்ள ஞானக்கல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு பூத காளியம்மன் திருக்கோவிலில் வைகாசி மாத அம்மாவாசை தினத்தை முன்னிட்டு தீச்சட்டி திருவிழா நடைபெற்றது.

முன்னதாக மாலை குருக்களால் யாகசாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மூட்டி, கற்பூரம் ஏற்றி, தீச்சட்டியை கையில் ஏந்தி கோயிலை வலம் வந்தனர். விழாவில் 10க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஞானக்கல்மேடு சுயம்பு பூதக்காளி அம்பாள் கோயில்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் வானூர் ஒன்றிய பெருந்தலைவர்வி.எம்.ஆர். சிவா தலைமையில் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகணபதி, தொழிலதிபர் திருஞானசம்பந்தம், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புருஷோத்தமன், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry