முகப்பு /புதுச்சேரி /

பங்குனி உத்திரம்: அவதாருடன் அவதரித்த முருகனை வியந்து பார்த்த புதுச்சேரி பக்தர்கள்..!

பங்குனி உத்திரம்: அவதாருடன் அவதரித்த முருகனை வியந்து பார்த்த புதுச்சேரி பக்தர்கள்..!

X
அவதாருடன்

அவதாருடன் அவதரித்த முருகன்

Pondicherry News | புதுவைஅருகே உள்ள பிள்ளையார்குப்பத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர் கோயிலில் செடல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அவதாருடன் ஊர்வலம் சென்ற முருகனை பொதுமக்கள் வியப்புடன் தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் பிள்ளையார் குப்பத்தில், பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சிவசுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம் விழா கொடியேற்றுதல் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், 2-ம் தேதி காலை 108 பால்குட ஊர்வலம், தொடர்ந்து இரவில் வள்ளி தெய்வானை சிவசுப்பிரமணியர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் நடைபெற்றது. கடலூர்-பாண்டி ரோடு ரெட்டிச்சாவடி அருகில் உள்ள ஆற்றங்கரையில் 108 காவடி மற்றும் பக்தர்கள் செடல் குத்தி லாரி, டிராக்டர், கார் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தனர் .

மேலும் ராட்சத கிரேனில் சாமியை அலங்கரித்து செடல் குத்தி அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்து வந்தனர். முருகர், அவதார் படத்தில் வரும் கதாநாயகன் மற்றும் படத்தில் வரும் மீன்களை போல உருவங்களை தயாரித்து அதில் இருவரும் அமர்ந்து இருப்பது போல தத்ரூபமாக உருவாக்கி, அப்பகுதி இளைஞர்கள் அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அவதாருடன் முருகனை கண்ட பொதுமக்கள் வியந்து வழிபட்டனர்.

top videos
    First published:

    Tags: Avatar, Local News, Puducherry