முகப்பு /புதுச்சேரி /

தைப்பூசத்தை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவடி, பால்குடம் சுமந்த பக்தர்கள்...

தைப்பூசத்தை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவடி, பால்குடம் சுமந்த பக்தர்கள்...

X
தைப்பூசத்தில்

தைப்பூசத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்

Puducherry News : தைப்பூசத்தை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவடி மற்றும் பால்குடம் சுமந்த பக்தர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். 27 நட்சத்திரங்களில் 8வது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலேயே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக கொண்டாடப்படுகிறது. முருகன் தனது அன்னை பார்வதியிடம் வேல் வாங்கி, திருக்கையில் வேல் ஏந்திய நாள் தான் தை பூச திருநாளாகும். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப் பூச திருநாளில் முருகன் குடியிருக்கும் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்வதும், காவடி சுமப்பது, வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செய்வது பக்தர்களின் வழக்கம்.

இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேவஸ்தானத்தில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட காவடிகளை முருக பக்தர்கள் ஏந்தியும், 150க்கும் மேற்பட்ட பால்குடங்களை பெண்கள் சுமந்தும் லாஸ்பேட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.

First published:

Tags: Local News, Puducherry