முகப்பு /புதுச்சேரி /

டிராக்டர் ஓட்டிச்சென்ற முருகப்பெருமானை பார்த்து வியந்த பக்தர்கள்... புதுச்சேரி கூடப்பாக்கத்தில் சுவாரஸ்யம்..

டிராக்டர் ஓட்டிச்சென்ற முருகப்பெருமானை பார்த்து வியந்த பக்தர்கள்... புதுச்சேரி கூடப்பாக்கத்தில் சுவாரஸ்யம்..

X
டிராக்டர்

டிராக்டர் ஓட்டும் முருகன்

Puducherry News | புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான்  டிராக்டரை ஒட்டி செல்வது போன்று அலங்காரம் செய்து நூதன முறையில் பக்தர் வழிபட்டனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் வகையில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

இந்நிலையில், புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டுவிவசாய தொழில் சிறக்க வலியுறுத்தி, உழவுத் தொழிலுக்கு முக்கியமான டிராக்டரை, முருகப்பெருமான் ஒட்டி செல்வது போன்று அலங்காரம் செய்து நூதன முறையில் பக்தர் வழிபட்டனர்.

இந்த காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், வேல் ஏந்தியும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry