முகப்பு /புதுச்சேரி /

ஆரோவில் அருகே அருஞ்சுவை உணவு கொடுத்து அசத்திய கிராம மக்கள்!

ஆரோவில் அருகே அருஞ்சுவை உணவு கொடுத்து அசத்திய கிராம மக்கள்!

X
சமபந்தி

சமபந்தி விருந்து

Puducherry Food feast | புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில் அருகேயுள்ள இடையஞ்சாவடி கிராமத்தில், நடைபெற்ற கோவில் திருவிழாவில், 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அருஞ்சுவை உணவு கொடுத்து கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஆரோவில் அருகேயுள்ள இடையஞ்சாவடி கிராமத்தில், அமைந்துள்ள பூரணி பொர்க்களை சமேத ஸ்ரீ அய்யனாரப்பன் ஆலயத்தில் சித்திரை இரண்டாம் திங்களை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு நடைபெற்றது.

இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அன்னதானத்தில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஆலய சார்பில் தட புடலாக அருஞ்சுவை உணவு (சமபந்தி போஜனம்) அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில், சுற்று வட்டார பகுதி சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வயிறார உண்டு மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Puducherry