முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி முத்து மாரியம்மன், திரௌபதி அம்மன் வீதி உலா! - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

புதுச்சேரி முத்து மாரியம்மன், திரௌபதி அம்மன் வீதி உலா! - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

X
திருவீதி

திருவீதி உலா

Puducherry News| திருபுவனை விநாயகம்பட்டு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், திரௌபதி அம்மன் ஆலய வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட விநாயகம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் முத்துமாரியம்மன், திரௌபதி அம்மன் ஆலய வீதி உலா மிகவும் விமர்சையாக  நடைபெற்றது.

மூன்றாம் உற்சவ நாளில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது.  அதைத்தொடர்ந்து பூ அலங்காரம் மற்றும் மின்விளக்குகளால் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. அப்போது நாதஸ்வரம் இசையோடு, அரியூர் பறைச் சொல் கலைக்குழு தாரை தப்பட்டை முழங்க அம்மன் வீதி உலா நடைபெற்றது. 

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

அதனைத் தொடர்ந்து தெருக்கூத்து அண்ணாதுரை ஆசிரியர் குழுவினருடன் ஆலயத்தின் அருகே தெருக்கூத்து நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puduchery