முகப்பு /புதுச்சேரி /

களைகட்டிய தமிழ் புத்தாண்டு.. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு!

களைகட்டிய தமிழ் புத்தாண்டு.. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு!

X
மணக்குள

மணக்குள விநாயகர் கோயில்

puducherry news | தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழ் புத்தாண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல் புதுச்சேரியில் கொண்டாட்டங்கள் களைகட்டின. புதுச்சேரி மணக்குள விநாயகர் தங்கக்கவசம் மற்றும் வைர கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை ஒட்டி உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலையில்கோயில் நடை திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் மற்றும் வைரக்கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்த மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர் . அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry, Tamil New Year