புதுச்சேரியில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்தார். இதனைத்தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், நேற்று (மே 25ம் தேதி) கார்த்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன்படி கார்த்தியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை பல்வேறு இடங்களில் கொண்டாடினர். அந்தவகையில் புதுவையில் உள்ள நடிகர் கார்த்தி ரசிகர் மன்றம் சார்பாக கார்த்தி நடித்து திரையரங்கில் புதிய திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கார்த்தி பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் பொதுமக்கள் கூடும் 3 இடங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. கார்த்தி ரசிகர் மன்ற மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்துகொண்டு உணவு வழங்கினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry, Tamil Cinema