முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் பெய்த கோடை மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

புதுவையில் பெய்த கோடை மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

X
புதுவையில்

புதுவையில் பெய்த கோடை மழை

Puducherry News | வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் பெய்த திடீர் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய ஓரிரு பகுதிகளில் லேசான முதல் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருபத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க : புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ரேஷன் கடை ஊழியர்கள்: கூலாக டென்னிஸ் விளையாடிய ரங்கசாமி

இந்நிலையில், புதுச்சேரி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை தாங்கிகொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் இன்று காலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

First published:

Tags: Local News, Puducherry, Weather News in Tamil