முகப்பு /புதுச்சேரி /

இனி இவங்க கிட்ட வச்சுக்காதீங்க வம்பு.. தற்காப்பு கலைகளில் அசத்தும் புதுச்சேரி மாணவிகள்!

இனி இவங்க கிட்ட வச்சுக்காதீங்க வம்பு.. தற்காப்பு கலைகளில் அசத்தும் புதுச்சேரி மாணவிகள்!

X
தற்காப்பு

தற்காப்பு கலைகளில் அசத்தும் மாணவிகள்

Puducherry News | புதுச்சேரி அரசு பள்ளியை சேர்ந்த 50 மாணவிகள் கடந்த மூன்று மாதங்களாக தற்காப்பு கலைகளை தீவிரமாக பயின்று வந்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அதை அவர்களே தைரியத்துடன் எதிர்கொள்ளும் விதமாக மாணவிகளை தயார் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் புதுச்சேரி லாஸ்பேட்டை கோலக்காரா அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இங்கு கல்வி கற்கும் 50 மாணவிகளுக்கு பள்ளி கல்வி துறையின் சமகர சிக்‌ஷா நிதி உதிவியின் கீழ் டேக் வோண்டா தற்காப்பு கலை கற்றுக் கொடுக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக இந்த தற்காப்பு கலையை கற்று வந்த மாணவிகள் அவர்கள் கற்ற கலையை சக மாணவர்கள் முன்னிலையில் செய்து காட்டினர். இதில் சிறப்பாக இக்கலையை செய்து காட்டிய மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த பரிசுகளை காவல் ஆய்வாளர் நாகராஜ் மாணவிகளுக்கு வழங்கி மாணவிகள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை தைரியமாக சமாளிக்க இந்த தற்காப்பு கலை உதவும் என பேசினார். மேலும் மாணவிகளுக்கு இக்கலையை பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் கிருபாகரன் மற்றும் கனிமொழி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர ராசு கெளரவித்தார்.

    First published:

    Tags: Local News, Puducherry