முகப்பு /புதுச்சேரி /

தடகள போட்டிகளில் கலக்கிய புதுவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

தடகள போட்டிகளில் கலக்கிய புதுவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

X
மாநில

மாநில அளவிலான தடகள போட்டி

Puducherry | புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் பிராந்தியங்களில் உள்ள சுமார் 1100 வீரர், வீராங்கனைகள் புதுவையில் நடைபெற்ற தடகள போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 12 வயது முதல் 19 வயது உடையவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தடகளப் போட்டியில், 200 மீட்டர் முதல் 1300 மீட்டர் வரை ஓட்ட பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் 12 வயது பெண்கள் பிரிவில் பிரண்ட்ஸ் அணியும், ஆண்கள் பிரிவில் செயின் பேட்டரிக் அணியும் வெற்றி பெற்றது. 14 வயது பெண்கள் பிரிவில் ஏ.பி அத்லடிக் அணியும், ஆண்கள் பிரிவில் ஜெசி ஓவன் அணியும் வெற்றி பெற்றது.

17 வயது பெண்கள் பிரிவில் ஸ்டார் அணி முதலிடத்தையும் ஆண்கள் பிரிவில் ஸ்டார் அணியும். இதேபோல் 19 வயது பெண்கள் பிரிவில் லியோனி மற்றும் ஆண்கள் பிரிவில் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

மேலும் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற இங்கே கிளிக் செய்யவும்

இவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு கொறடாவும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.டி.ஆறுமுகம் பரிசு வழங்கி கௌரவித்தார்.  நிகழ்ச்சியில் யங் இந்தியன்ஸ் சார்பில் திலீப், யோகி மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், ராமலிங்கம், ரகுராமன், முத்துவேலன், லெனின் ராஜ், சுந்தர்ராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Puducherry