முகப்பு /புதுச்சேரி /

உலக வாய் சுகாதார தினம் : நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவர்கள்!

உலக வாய் சுகாதார தினம் : நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவர்கள்!

X
நடனமாடி

நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவ மாணவிகள்

Puducherry News|புதுவையில் உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கடற்கரை சாலையில் நடனமாடி விழிப்புணர்வு செய்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலக வாய் சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறந்த வாய் சுகாதாரத்தின் நன்மைகளை எடுத்துக் காட்டவும், வாய் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும், வாய் சுத்தத்தைப் பேண வலியுறுத்தவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

புதுச்சேரியிலும் வாய் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த வாரம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வாய் சுகாதார தினத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி பொது மக்களை கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடற்கரைக்கு சாலைக்கு வந்த பொதுமக்கள் அவர்களின் நடனத்தை ரசித்தவாறு கைதட்டி வரவேற்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry