முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் உலக அமைதியை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி!

புதுச்சேரியில் உலக அமைதியை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி!

X
மோட்டார்

மோட்டார் சைக்கிள் பேரணி

Puducherry News | புதுவையில் உலக அமைதியை வலியுறுத்தி தனியார் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினர். இதை புதுவை ஐ.ஜி. சந்திரன் தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி உலக அமைதியை வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா கடற்கரை சாலையில் நடந்தது.

இந்த பேரணியை ஐ.ஜி.சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுவை, காஞ்சி, உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணியில் மாணவர்கள் செல்லும் வழியில் உள்ள பொதுமக்களுக்கு உலக அமைதி விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் வழங்கினார்.

கடற்கரை காந்தி சாலையில் தொடங்கி, புதிய பஸ் நிலையம், மூலக்குளம் வழியாக வில்லியனூர் துணை தாசில்தார் அலுவலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகே முடிவடைந்தது.

First published:

Tags: Local News, Puducherry