ஹோம் /புதுச்சேரி /

புதுவையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 300 பேர் பங்கேற்பு

புதுவையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 300 பேர் பங்கேற்பு

X
செஸ்

செஸ் போட்டி

Puducherry | புதுச்சேரியில் 5 சுற்றுகளாக நடைப்பெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 300 பேர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அட்டாக் அண்ட் டிபன்ஸ் அகடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்கம் போட்டி தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இதில் புதுவை, காரைக்கால், ஏனாம், மாகி மற்றும் தமிழ்நாடு பகுதியை சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியானது, மொத்தம் 5 சுற்றுகளாக நடைப்பெற்றது.

சிவபெருமான் ஆன முதலமைச்சர் ரங்கசாமி... புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் வைத்த போஸ்டரால் பரபரப்பு!

ஒவ்வொரு சுற்றிலும் வெளியேறும் வீரர்களுக்கு போட்டியில் கலந்து கொண்ட தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியில் முதல் 3 இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்க பணம் மற்றும் சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது.

செய்தியாளர்: பிரசாந்த், புதுச்சேரி.

First published:

Tags: Local News, Puducherry