முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்- பக்தர்கள் பரவசம்

புதுச்சேரி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்- பக்தர்கள் பரவசம்

X
கோவில்

கோவில் கும்பாபிஷேக விழா

Puducherry | புதுச்சேரி பெரியார் நகர் அருள்மிகு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் அருள்மிகு நாக முத்து மாரியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக கடந்த 27ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து நவக்கிரக ஹோமம்,மந்திரயாக வேள்வி, புதிய விக்ரகங்களுக்கு கரிக்கோலம் உள்ளிட்டவை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வரா பூஜை, சங்குரார்ப்பணம், ஆகியவை நடைபெற்று நான்காம் காலா பூஜைகள் நிறைவுடன்யாத்திரா தானம் உடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து மீன லக்கினத்தில் ஆலயத்தில் எழுந்த நிலையில் உள்ள ஆதி விநாயகர், பால விநாயகர், பால முருகன், அர்த்தநாரீஸ்வரர், பஞ்ச முக ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன்,

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்திமற்றும் கோவில் விமானத்திற்க்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், இளைஞர் குழு ஊர் பொதுமக்கள், பெரியார் நகர் முல்லை நகர் மற்றும் செங்கேணி அம்மன் நகர் மற்றும் ஜே.வி.எஸ் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry